

பக்சர்: பிஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டது. அந்த மாநிலத்தில் உள்ள தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது.
கடந்த வாரம் இதே பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில் அதே மாவட்டத்தில் தற்போது சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கிழக்கு ரயில்வே விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்.