Published : 31 Jan 2018 01:16 PM
Last Updated : 31 Jan 2018 01:16 PM

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயில் நடையடைப்பு : இரவு 10 மணிக்கு தரிசனம்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 11 மணி நேரம் மூடப்பட்டு, இரவு 9.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கிரகணம் காரணமாக நைவேத்தியம் தயாரிக்கப்படும், ‘போட்டு’ மற்றும் நித்ய அன்னதாக மையங்களும் மூடப்பட்டன.

இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 11 மணியளவில் நடை சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்கள் இரவு 10 மணிக்கு சர்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் பெரும்பாலான ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளதாலும், இலவச அன்னபிரசாதம் தயாரிப்பும் நிறுத்தப்பட்டதாலும், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏழுமலையான் கோயில் உட்பட ஆந்திராவில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், கபிலேஸ்வரர் கோயில், திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோயில், கானிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் உட்பட அனைத்துக் கோயில்களும் நடை சாத்தப்பட்டன.

ஆனால் பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாகத் திகழும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மட்டும் கிரகண கால அபிஷேகம் நடத்த திறந்திருக்கிறது.

பட விளக்கம்:

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. (கோப்புப்படம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x