Published : 01 Jul 2014 08:29 PM
Last Updated : 01 Jul 2014 08:29 PM

பாலியல் பலாத்கார தலைநகரம் டெல்லி: உறுதி செய்கிறது என்.சி.ஆர்.பி தரவுகள்

பாலியல் பலாத்காரத் தலைநகரம் டெல்லி என்று பொதுமக்கள் மத்தியில் ஏற்கெனவே பேசப்பட்டு வந்தது. இப்போது அதிகாரப்பூர்வ தரவாக வெளிவந்துள்ளது.

தேசியக் குற்றப் பதிவுகள் கழகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 18.63 சதவீதம் பேர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது அதன் மக்கள் தொகையின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் டெல்லியில் அதிக பாலியல் பலாத்காரம் நடைபெறுவதாக அந்தத் தரவுகள் தெரிவித்துள்ளன.

2012 ஆம் ஆண்டு அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிஜோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில், அதன் மக்கள் தொகையின் அடிப்படையில் விகிதாச்சார அளவில் அதிக பாலியல் பலாத்காரப் புகார்கள் பதிவாகியிருந்தது.

அந்த மாநிலங்களைத் தற்போது டெல்லி பின்னுக்குத் தள்ளியுள்ளது. நகரங்களில் குவாலியர், ஜபல்பூர் (இரண்டும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நகரங்கள்) ஆகியவற்றையும் விடவும் டெல்லியில் பாலியல் பலாத்காரப் புகார்கள் அதிகம் பதிவாகியுள்ளது.

மேலும் 2013ஆம் ஆண்டு தரவுகளின்படி பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் 27% அதிகரித்துள்ளது.

கொலை வழக்குகள் சற்றே குறைந்துள்ளன. ஆனால் திருட்டு, மற்றும் கொள்ளை முறையே 10% மற்றும் 17% அதிகரித்துள்ளது.

ஆனால் புகார் அளிக்கப்பட்ட பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக என்.சி.ஆர்.பி. தரவுகள் தெரிவிக்கின்றன.

2013 ஆம் ஆண்டில் 33,707 பாலியல் பலாத்காரப் புகார்கள் பதிவாகியுள்ளன. அதாவது 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் பலாத்காரம் என்ற எண்ணிக்கையில் நடந்துள்ளது. சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் புகார்கள் 45% அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில்தான் குற்றப்பதிவு விகிதம் அதிகம். காரணம் புகார்கள் போலீஸ் துறையினரால் ஓரளவுக்கு சரியாக பதிவு செய்யப்படுகிறது. டெல்லி இப்போது குற்றப்பதிவு விகிதத்தில் இரண்டாவதாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x