Last Updated : 01 Dec, 2017 02:15 PM

 

Published : 01 Dec 2017 02:15 PM
Last Updated : 01 Dec 2017 02:15 PM

டெல்லியில் மோடியை சந்திக்கிறார் ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்க இருக்கிறார்.

இது தொடர்பான செய்தியை ஒபாமா அறக்கட்டளை அறிவித்துள்ளது ஒபாமா பங்குபெறும் கூட்டத்தில் இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்து வரும் 200க்கும் மேற்பட்ட இளம் தலைவர்களிடத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்.

இதுகுறித்து ஒபாமா அறக்கட்டளை தரப்பில், பாரக் ஒபாமா இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியப் பிரதமர் மோடியை டெல்லியிலுள்ள டவுன் ஹாலில் சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இளம் தலைவர்களிடத்தில் ஒபாமா உரையாற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒபாமா, முதன்முதலாக பிரதமர் மோடியை அவர் சந்திக்கவுள்ளார். ஒபாமாவின் வருகையையடுத்து டெல்லியில் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x