Published : 08 Oct 2023 05:26 AM
Last Updated : 08 Oct 2023 05:26 AM

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல்: தமிழர்களை மீட்க உதவி எண்கள்

சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதால், இரு நாட்டுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால், அங்குள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வாழ் தமிழர்கள் அவர்களின் குடும்பத்தினர் 91-87602 48625, 91-99402 56444, 91-96000 23645 என்ற தொலைபேசி எண்களிலும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அயலக தமிழர் நலவாரிய அதிகாரிகள் கூறும்போது, “இஸ்ரேலில் சிக்கியுள்ள 15 தமிழர்கள், அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டுள்ளனர். ஜெருசலேம் உள்ளிட்ட பலவேறு நகரங்களில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை மீட்கத் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x