

நாடு முழுவதும் 930 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் உத்தரப் பிரதே சத்தில் மட்டும் அதிக அளவாக 105 இடங்கள் காலியாக உள்ளன.
இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டில் மொத்தம் 4,728 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் உள்ளன. இதில் 3,798 அதிகாரி கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 930 இடங்கள் காலியாக உள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 489-ல் 105 இடங்களும், மேற்குவங்கத்தில் உள்ள 347-ல் 96 இடங்களும் காலியாக உள்ளன. ஒடிஸாவின் 188-ல் 83, கர்நாடகாவின் 205-ல் 61, தமிழகத்தின் 263-ல் 52, ஆந்திராவின் 258-ல் 51, மகாராஷ் டிராவின் 302-ல் 72 ஐபிஎஸ் பணி யிடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்களை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின் றன. குறிப்பாக ஆண்டுதோறும் நேரடித் தேர்வு மூலம் சேர்க்கப் படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 2005-ம் ஆண்டில் 88-லிருந்து 103 ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர் இது 2008-ல் 130 ஆகவும், 2009-ல் 150 ஆகவும் தொடர்ந்து அதிகரிக் கப்பட்டது. ஆனாலும் காலியி டம் முழுவதையும் நிரப்ப முடிய வில்லை. கடந்த 2013-ம் ஆண்டில் 145 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டு பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றனர்.
இதுதவிர, வேறு முறையி லும் இந்த இடங்கள் நிரப்பப் படுகின்றன. அதாவது வரையறுக் கப்பட்ட போட்டித் தேர்வு மூலம் ஆண்டுதோறும் 80 பேர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக் கப் படுகின்றனர். மேலும் மாநில காவல் துறையில் பணிபுரி யும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் ஐபிஎஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்றார் அவர்.