வாஜ்பாயின் 93-வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

வாஜ்பாயின் 93-வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 93-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “அடல்ஜி-யின் வீட்டுக்குச் சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். மேலும் அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டேன்” என்று குறிப்பிட்டுள் ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுஉள்ளிட்ட பலரும் வாஜ்பாய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். 1924-ல் பிறந்த வாஜ்பாய் லக்னோவில் இருந்து 1991, 1996, 1998, 1999, 2004-ல் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் தலைவர் வாஜ்பாய் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in