சைவ உணவு கொள்கைக்கு எதிர்ப்பு: மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த மும்பை ஐஐடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை ஐஐடி-யில் சைவ உணவு கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று மும்பை ஐஐடி. அங்கு செயல்படும் 3 விடுதிகளுக்கு பொதுவாக உள்ள உணவகத்தில் 6 மேஜைகள் சைவ மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதாக உணவக கவுன்சில் கடந்த வாரம் அறிவித்தது. இது தொடர்பாக மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில், “இந்த சைவ உணவு கொள்கையை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்” என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மும்பை ஐஐடி உணவக கவுன்சிலின் சைவ உணவுக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இடதுசாரி மாணவர்கள் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து, மும்பை ஐஐடியின் அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்கிள், ‘எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில், “கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, நவீன காலத்தில் தீண்டாமையை நிலை நிறுத்த செயல்படும் கட்ட பஞ்சாயத்து போல அமைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in