

ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம், "கிழக்கு ராஜஸ்தானில் சவாய் மாந்தோபூர் நகரில் 45 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து இன்று (சனிக்கிழமை) காலை பனாஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆற்றில் மூழ்கி 32 பேர் பலியாகினர். 3 பேர் காணமல் போயினார். காணமல்போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
அதிகாலை புகைமூட்டம் காரணமாக பேருந்தை வேகமாக ஓட்டிவந்த பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து வாகனம் விலகியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.