மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38 கோடி இழப்பீடு: மத்திய அரசு வழங்குகிறது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த மே 3-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனத்தைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு, மணிப்பூர் விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே.தினேஷ் திட்டம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38.06 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்க உள்ளது. இதுகுறித்து விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே. தினேஷ் கூறியதாவது:

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதற்காக ரூ.38.06 கோடியை மத்திய அரசு விரைவில் வழங்கும். நவம்பர் மாதத்துக்குள் இந்தத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கலவர சம்பவங்களால் சுமார் 5,127 ஹெக்டேர் நிலங்களில் விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் கோரிக்கையை மணிப்பூர் அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in