மணிப்பூரில் 2 மாணவர்களை கொன்ற குற்றவாளிகளை பிடிக்க முதல்வர் உறுதி

மணிப்பூரில் 2 மாணவர்களை கொன்ற குற்றவாளிகளை பிடிக்க முதல்வர் உறுதி
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் மைதேயி சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த மே 3-ம் தேதி பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் காரணமாக முடக்கப்பட்டிருந்த செல்போன் இணையதள சேவை கடந்த சில தினங்களுக்கு முன்பு தளர்த்தப்பட்டது. இதையடுத்து, 2 மாணவர்களின் சடலம் அடங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அங்கு மீண்டும் போராட்டம் வெடித்ததால் செல்போன் இணையதள சேவையை அரசு மீண்டும் முடக்கியது.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஜூலை மாதம் காணாமல் போன 2 மாணவர்களின் சடலம்தான் இணையத்தில் வைரலானது என தெரியவந்தது. அவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “இரண்டு மாணவர்களை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in