

மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த திங்கள்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் பெறும் சிலிண்டர்களுக்கு மானியம் அளிக்கப்படாது. தற்போது டெல்லி நிலவரப்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.906 ஆக உள்ளது. விலையேற்றத்துக்குப் பிறகு இது ரூ. 922.50 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் விமான பெட்ரோல் விலை 0.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.