கேரள மாநிலத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

கேரள மாநிலத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

கோழிக்கோடு: கேரள மாநிலம் கரிப்பூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர்.

ரியாத்தில் இருந்து வந்த முகம்மது பஷீர், துபாயில் இருந்து வந்த முகம்மது மிட்லஜ்,தோகாவில் இருந்து வந்த ஸ்ரீ லிங்கேஷ், அஜீஸ் ஆகியோரிடம் இருந்து 970 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர மேலும் 2 பயணிகளிடம் இருந்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 5.4 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடி என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in