Published : 18 Dec 2017 01:32 PM
Last Updated : 18 Dec 2017 01:32 PM

குஜராத்: தலித், பழங்குடியினர் தொகுதிகளில் நிலவரம் என்ன?

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, பாஜக ஆட்சியமைக்கும் என்றாலும் 2012-ஐ ஒப்பிடும் போது சற்று பின்னடைவு கண்டுள்ளது.

பாஜக தரப்பில் ஹர்திக் படேலுடனான காங்கிரஸ் கூட்டணியை ‘சமூகத்தை சாதி ரீதியாக பிரித்தாளும் உத்தி’ என்று பாஜக வர்ணிக்கிறது. மாறாக காங்கிரஸ் தரப்போ ராகுல் காந்தியின் ‘பாசிட்டிவ்’ தாக்கம் என்று தூக்கி விடுகின்றன.

அந்தந்தக் கட்சிக்கு அவர்கள் வெற்றி பெருமிதத்துக்குரியதே. இதில் பழங்குடியினர் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் நிலவரம் என்னவென்பதைப் பார்ப்போம்:

மொத்தம் குஜராத்தில் பழங்குடியினப் பிரிவினருக்காக 26 ரிசர்வ்டு தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 12 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள பாரதிய பழங்குடிக் கட்சி 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

அதே போல் SC பிரிவினருக்கான 13 தனித்தொகுதிகளில் பாஜக 7-ல் முன்னிலை வகிக்கின்றன. தலித் சுயேச்சை வேட்பாளர் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x