

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு புகாருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருந்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. மைத்ரேயன், "கட்ஜு புகார் குறித்து மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் மவுனம் கலைய வேண்டும். அவரது மவுனம், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாகவே அமைகிறது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், முன்னாள் பிரதமர் இவ்விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
இதனால் அவையில் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.