Last Updated : 29 Dec, 2017 12:04 PM

 

Published : 29 Dec 2017 12:04 PM
Last Updated : 29 Dec 2017 12:04 PM

கிருஷ்ணரின் அவதாரம் மோடி: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கருத்து

கிருஷ்ணரின் அவதாரம் மோடி எனவும் அவர் ஒரு தசாப்தத்துக்கும் மேல் நாட்டை ஆள்வார் என்றும் ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ ஞான் தேவ் அஹூஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக பசு கடத்தல்காரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியவரான அஹூஜா 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியில், ''கடவுள் கிருஷ்ணரின் அவதாரமே மோடி. அவர் ஒரு தனித்துவமான ஆளுமை. மக்களால் இப்போது அவரைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் நிலைமை சீராகும் நாள் விரைவில் வரும்.

'நீடித்த ஆட்சி'

மக்களவைத் தேர்தல் 2019-க்குப் பிறகும் அவர் ஒரு தசாப்தத்துக்கும் (10 ஆண்டுகள்) மேலாக ஆட்சியைத் தொடர்வார். வம்சாவளி அரசியலை ஊக்குவித்த நேரு குடும்பத்தைப் போன்றவர் அல்ல மோடி. தன்னுடைய சொந்தக் குடும்பத்தைக் கூடத் தன் வீட்டுக்கு அழைக்காதவர் அவர்.

'வரலாற்று முடிவுகளை எடுத்தவர்'

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி, ஜன் தன் திட்டம் ஆகிய வரலாற்று முடிவுகளை எடுத்தவர் மோடி.

மேவாட் பகுதி மக்கள் அனைவரும் பசுக்களுடன் இணக்கமானவர்கள். அவற்றுடன் பாசத்தால் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருப்பார்கள்.

'யாராலும் எதுவும் செய்ய முடியாது'

குஜ்ஜார்கள், ஜாட்கள், ராஜபுத்திரர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் இப்படி யாராக இருந்தாலும் இரவில் விழிப்புடன் இருக்கிறார்கள். பசு கடத்தல்காரர்களின் செயல்கள் அவர்களை கோபமடையச் செய்கின்றன. இதனால் அவர்கள் எல்லை மீறுகிறார்கள். நானாக இருந்தாலும், மோடி என்றாலும் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது.

பசு கடத்தல்காரர்களின் மீது உள்ளூர் கிராமத்தினரே தாக்குதலில் ஈடுபடுகின்றனர். பசு பாதுகாவலர்களுக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது'' என்றார் அஹூஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x