

தொழில்நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி வளர்ச்சிக்காக மேலும் 5 ஐ.ஐ.எம் மற்றும் 5 ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் நாடு முழுதும் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
"ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதேபோல் மேலாண்மைக் கல்வி வளர்ச்சிக்காக, இமாச்சல், பீகார், ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது” என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நாட்டுக்குத் தேவைப்படுவதால், ஜெயபிரகாஷ் நாராயண் திறன் வளர்ப்பு மையம் ஒன்றை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைக்க இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.