திருப்பதி பிரம்மோற்சவம் - நாளை தொடக்கம்

திருப்பதி பிரம்மோற்சவம் - நாளை தொடக்கம்
Updated on
1 min read

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில் நாளை 18-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் அக். 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் வெகு விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழாவில் அங்குராற்பன நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட உள்ளது.இதனை தொடர்ந்து திங்கட்கிழமை உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர், விஸ்வகேசவர் முன்னிலையில், கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட தர்பை மற்றும் சணல் கயிற்றால் கருடன் சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்படும்.

பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன், கோயிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in