

புதுடெல்லி: டெல்லி காவல் துறை வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: டெல்லி போலீஸாருக்கு பிரதமர் மோடி விருந்தளிக்க உள்ளார். ஜி20 மாநாட்டில் பணியாற்றிய காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அனைத்து போலீஸாரின் விவரங்களையும் பட்டியலிட்டு தருமாறு டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் 450 போலீஸார் இடம்பெறுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஆணையர் சஞ்சய் அரோராவும் பிரதமருடனான விருந்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரவு விருந்து நிகழ்ச்சியை ஜி20 உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.