Published : 01 Dec 2017 09:15 AM
Last Updated : 01 Dec 2017 09:15 AM

ஜம்மு காஷ்மீரின் லே நகரில் -9.4 டிகிரி குளிர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பிராந்தியத்தில் வெப்பநிலை நேற்று முன்தினம் இரவு மிகவும் குறைந்தது. இதில் லே நகரில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை (-9.4 டிகிரி) நிலவியதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இது தொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “லே நகரின் வெப்பநிலை புதன்கிழமை இரவு மைனஸ் 9.4 டிகிரியாக குறைந்தது. இதன் அருகில் உள்ள கார்கில், கடந்த திங்கள்கிழமை அதிக குளிர் கொண்ட நகராக(குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி) இருந்தது. இந்நிலையில் இதன் வெப்பநிலை புதன்கிழமை இரவு 3 டிகிரி மேம்பட்டிருந்தது.

ஸ்ரீநகரில் வெப்பநிலை புதன்கிழமை இரவு 3 டிகிரி குறைந்து மைனஸ் 1.7 டிகிரியாக இருந்தது” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x