Published : 11 Sep 2023 08:06 AM
Last Updated : 11 Sep 2023 08:06 AM
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு, பாரத் மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளித்த விருந்தில் 83 இந்திய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்தளித்தார். இதில் மாநாட்டுக்கு வந்திருந்த உலகத் தலைவர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் 83 வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன.
இந்திய ரொட்டி வகைகளில் மும்பை பாவ், வெங்காய பன், ஏலக்காய் ஸ்வீட் பிரட், தந்தூரி ரொட்டி, பட்டர் ரொட்டி, நான் குல்ச்சா, பிகானிர் தால் பரோட்டோ, மலபார் உருளை பரோட்டா தால் வகைகளில் ஜோவார் தால் தட்கா, பஞ்சாப் தால், ராஜஸ்தானி தால் பாட்டி சுர்மா ஆகியவையும், உள்ளூர் உணவு வகைகளில் தஹி பல்லா, சமோசா, பேல்பூரி, வட பாவ், ஸ்பைசி சாட், வாட்டர் பேன்கேக், தயிர் பூரி, சேவ் பூரி, மிளகாய் வடை, பாலஸ், லீல்வா கச்சோரி, பொட்டட்டோ ஹார்ட் ஹேபி, திக்கி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அரிசி உணவு வகைகளில் வெங்காய புலாவ், ஜோத்பூரி கபுலி புலாவ், தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி சாம்பார், ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தாப்பம், மசாலா தோசை, மைசூர் தோசை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. சட்னி மற்றும் பச்சடி வகைகளில் வெள்ளரி பச்சடி, புளி மற்றும் பேரீச்சம்பழ சட்னி, ஊறுகாய், தயிர் ஆகியவை இருந்தது. சிறுதானிய உணவுகளில் பல வகை உணவுகள் இடம் பெற்றிருந்தன.
இனிப்பு வகைகளில் மாதுரிமா என்ற சிறுதானிய புட்டிங், ஜிலேபி, உ.பி.யின் குட்டு மல்புவா, வால்நட் மற்றும் ஜிஞ்சர் புட்டிங், ரசமலாய், மலாய் கீவர், குலாப் சுர்மா, கம் புட்டிங், கந்த், சேமியா பாயாசம், பாதாம் புட்டிங், மிஸ்ரி மாவா, கீர், கேரட் ஹல்வா, மோதி லட்டு, டிரை ப்ரூட் ஸ்வீட், வால்நட்-ஃபிக் புட்டிங், ஆங்கூரி ரசமலாய், ஆப்பிள் கிரம்பிள் பை, ஜோத்பூர் மாவா கச்சோரி ஆகியவையும், ஐஸ்கிரீம் வகைகளில் ஸ்டாரா பெர்ரி ஐஸ்கிரீம், பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம், பிஸ்தா குல்பி, மலாய் குல்பி ஃபலுடா, கேசர் பிஸ்தா தண்டய் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
பான வகைகளில் ஃபில்டர் காபி, டார்ஜிலிங் தேநீர், காஷ்மீரி காவா ஆகியவை இடம் பெற்றிருந்தன. சாலட் வகைகளில் இந்திய கிரீன் சாலட், பாஸ்தா மற்றும் கிரில்ட் வெஜிடபிள் சாலட், சுண்டல் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
ஜி20 விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் நாட்டின் பல பகுதிளைச் சேர்ந்த மொத்தம் 83 வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன. இது இந்திய பாரம்பரியம் மற்றும் உணவு வகைகளை வெளிநாட்டு தலைவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
இந்த விருந்தில் முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT