தேசிய நீதி ஆணையம்: சட்ட வல்லுநர்களிடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு

தேசிய நீதி ஆணையம்: சட்ட வல்லுநர்களிடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு
Updated on
1 min read

தேசிய நீதி ஆணையம் அமைப்பது பற்றி சட்ட வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகளிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது கொலீஜியம் என்று அழைக்கப்படும் நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து வருகிறது. இந்த முறையை மாற்றி, நீதிபதிகள் நியமனத்தை மேற்கொள்ள தேசிய நீதி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. .

இது தொடர்பாக முக்கிய தேசிய கட்சிகளின் தலைவர்களின் கருத்தைக் கேட்டு மத்திய அரசு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பிரபல சட்ட வல்லுநர்களிடமும், முன்னாள் நீதிபதிகளிடமும் வரும் திங்கள்கிழமை கருத்து கேட்க மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முடிவு செய்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுப் புகாருக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பணி நீட்டிப்புக்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு நெருக்கடி கொடுத்ததாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தேசிய நீதி ஆணையத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் உள்ள பாஜக அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in