பிரதமர் மோடியை பாதுகாக்கும் எஸ்பிஜி பிரிவின் இயக்குநர் உயிரிழப்பு

பிரதமர் மோடியை பாதுகாக்கும் எஸ்பிஜி பிரிவின் இயக்குநர் உயிரிழப்பு

Published on

குருகிராம்: பிரதமர் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) இயக்குநர் அருண் குமார் சின்ஹா, உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

குருகிராமில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயரிழந்தார். இதனை மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். அவரது உயிர் பிரிந்த நேரத்தில் உறவினர்கள் அவருடன் மருத்துவமனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தான் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987-ம் ஆண்டு கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2016 முதல் எஸ்பிஜி பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு பணி நீட்டிப்பு செய்து, தொடர்ந்து இந்தப் பொறுப்பில் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

கடத் 1985-ல் எஸ்பிஜி பிரிவு நிறுவப்பட்டது. தேசத்தின் பிரதமரின் பாதுகாப்பை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உறுதி செய்யும் வகையில் இந்தப் பிரிவு இயங்கி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in