ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வார காலம் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

ராகுல் காந்தி | கோப்புப் படம்.
ராகுல் காந்தி | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒருவார கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி ஐரோப்பிய யூனியன் வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். அதேபோல் செப்டம்பர் 9 ஆம் தேதி பாரிஸில் உள்ள பிரான்ஸ் தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் இருந்து நார்வே செல்லும் அவர், அங்கு ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
செப்டம்பர் 11 ஆம் தேதி அவர் இந்தியா திரும்புகிறார்.

ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இதையொட்டி, டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பின் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெறும் நாட்களில் ராகுல் தனது ஐரோப்பிய பயணத்தைத் திட்டமிட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in