2014-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 4.5 லட்சம் பேர்

2014-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 4.5 லட்சம் பேர்
Updated on
1 min read

2014ம் ஆண்டு முதல் 4.5 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதாக, வெளியுறவுத்துறை இணையமைச்சர்  வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

''கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 4,52,109 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்கள் மொத்தம் 117 நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள குடிபெயர்ந்து வந்தவர்கள் தொடர்பான 2016-ம் ஆண்டு விவரப்படி, அதிகபட்சமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு 10,298 இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். நியூஜெர்ஸி மாகாணத்தில் 5,312 பேரும், டெக்ஸாஸில் 4,670 பேரும், நியூயார்க்கிற்கு 2,954 பேரும் இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்துள்ளனர். 4,052 செவிலியர் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளனர்'' எனக் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in