உத்தராகண்டில் டிசம்பரில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு

உத்தராகண்ட் மாநில டேராடூனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாட்டுக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிமுகம் செய்தார்.
உத்தராகண்ட் மாநில டேராடூனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாட்டுக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிமுகம் செய்தார்.
Updated on
1 min read

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் வரும் டிசம்பர் மாதம் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாட்டுக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிமுகம் செய்தார்.

பின்னர் அவர் பேசும்போது, “சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாடு டேராடூனில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இந்த முறை, உச்சி மாநாட்டின்போது, ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக பல்வேறு துறைகளுக்காக 27 புதிய கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய நில வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டுக்கான இலச்சினை மாநிலத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பச்சை நிறத்தில் உள்ள இலச்சினை, மாநிலத்தின் இயற்கை அழகைக்குறிக்கும் வகையில் அமைந் துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in