இந்தியா ஒரு ‘இந்து தேசம்’ - ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

இந்தியா ஒரு ‘இந்து தேசம்’ - ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு
Updated on
1 min read

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் “தைனிக் தருண் பாரத்" நாளிதழை நடத்தும் ஸ்ரீ நர்கேசரி பிரகாசன் நிறுவனத்தின் புதிய கட்டிடமான "மதுகர் பவன்" திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது: இந்தியா ஒரு "இந்து தேசம்" என்பது உண்மையான கூற்று.

கருத்தியல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் இந்துக்களே. அதேபோன்று, இந்துக்கள் என்பதும் அனைத்து இந்தியர்களையும் குறிக்கும் சொல்லாடலே. இன்று இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்து கலாச்சாரம், இந்து முன்னோர்கள், இந்து நிலத்துக்கு சம்பந்தம் உடையவர்களே தவிர அதனை தாண்டி வேறு எதுவும் இல்லை.

சிலர் இதனைப் புரிந்து கொண்டுள்ளனர். சிலர் தங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் சுயநலத்தால் புரிந்து கொண்ட பிறகும் அதனை வெளிப்படுத்துவதில்லை. மேலும் சிலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை அல்லது மறந்துவிட்டார்கள் என்பதே உண்மை. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in