

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த அஷ்தோஷ் சிங் நானோ மற்றும் மென்பொருள் அறிவியல் மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்றுமுன்தினம் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில், “கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் ரவுத்தனஹள்ளி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் என் கார் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” என குறிப்பிட்டி ருந்தார்.
இதுகுறித்து கர்நாடக காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அலோக் குமார், “இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என பதிலளித்துள்ளார்.