க‌ரோனா காலத்தில் உபகரணம் வாங்கியதில் பாஜக ஊழல்? - குன்ஹா தலைமையில் விசாரணை குழு

ஜான் டி குன்ஹா
ஜான் டி குன்ஹா
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜக‌ ஆட்சியில் கடந்த 2020-21 மற்றும் 2021-22 நிதி ஆண்டுகளில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டன. இதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டதில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து முதல்வர் சித்தராமையா, ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் டி குன்ஹா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு, அந்த ஊழல் புகார் குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி ஜான் டி குன்ஹா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்தவர். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்தவர். அவர் தலைமையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in