Last Updated : 19 Dec, 2017 04:45 PM

 

Published : 19 Dec 2017 04:45 PM
Last Updated : 19 Dec 2017 04:45 PM

தன்னை விட தாஜ்மஹால் அழகு எனப் புகழ்ந்த கணவருடன் நின்று புகைப்படம் எடுக்க மறுத்த மனைவி

தன்னை விட தாஜ் அழகு எனக் கணவர் புகழ்ந்தமையால் அவருடன் நின்று படம் எடுக்க மறுத்துள்ளார் மனைவி. இதனால், கோபம் கொண்ட கணவர் தன் மனைவியை தாக்கியுள்ளார்.

ஆக்ராவின் தாஜ்மகால் முன் நடைபெற்ற இந்த சம்பவத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.

உபியின் அலிகரில் புதிதாக மணமுடித்த தம்பதி அருகிலுள்ள ஆக்ராவின் தாஜ்மகாலை கடந்த ஞாயிறு அன்று காணச் சென்றனர். அதன் உள்ளே நுழைந்தவுடன் தாஜ்மகாலின் அழகைக் கண்டு அந்த இளைஞர் வியந்துள்ளார். தன்னை மறந்தவர் மனைவியை பார்த்து, ‘உன்னை விட தாஜ் எவ்வளவு அழகு. இதை கட்டிய ஷாஜஹானின் மனைவி மும்தாஜும் எத்தனை அழகாக இருந்திருப்பார்? தாஜ் முன்னால் உனது அழகு ஒன்றுமே இல்லை.’ எனத் தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கோபமுற்ற மனைவியின் முகம் கோபத்தில் சிவந்துள்ளது. அப்போது, தாஜ்மகாலுக்கு வருபவர்கள் அனைவரும் செய்வது போல், அதன் முன்னே போடப்பட்டு சலவை கல் பலகையில் படம் எடுக்க தன் மனைவியை அழைத்துள்ளார் கணவர். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி, ‘அழகில்லாத நான் உன்னுடன் படம் எடுக்க மாட்டேன். நீ போய் மும்தாஜ் சமாதியுடன் அதை எடுத்து கொள்’ எனக் கூறியுள்ளார். இதனால், கோபமுற்ற கணவர் தன் மனைவியை அங்குள்ள பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியுள்ளார். இதை பார்த்து அங்கு கூட்டம் சேர்ந்து கொண்டது.

பாதுகாப்பு போலீஸாரிடம் புகார்

இந்த சம்பவத்தை அங்கு குடும்பத்துடன் வந்திருந்த ருக்ஸானா பர்வீன் எனும் ஆக்ராவின் லோஹா மண்டி காவல்நிலைய கான்ஸ்டபிள் பார்த்து விட்டார். உடனே அவர் தாஜ்மகாலில் பாதுகாப்பு இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம்(சிஐஎஸ்எப்) புகார் செய்துள்ளார்.

இதை அடுத்து அங்கு வந்த சிஐஎஸ்எப் படை வீரர் கணவன், மனைவி இருவரிடமும் விசாரணை செய்துள்ளார். இதில், இருவருமே தாம் புகார் அளிக்க விரும்பவில்லை எனக் கூறி, ஒருவொருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். இதனால், கணவரை மட்டும், ’மீண்டும் மனைவியை அடிக்க மாட்டேன்’ என எழுதி  கையெழுத்து வாங்கிவிட்டு அங்கிருந்து கிளப்பியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x