Published : 19 Dec 2017 09:38 PM
Last Updated : 19 Dec 2017 09:38 PM

கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டாம்: அலிகார் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு கெடுபிடி

உ.பி. மாநிலத்தில் உள்ள அலிகாரில் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் சுற்றறிக்கை அனுப்பியதாக எழுந்துள்ள செய்திகளை அடுத்து போலீஸாருக்கு மாநில அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜி ஆனந்த் குமார் அனைத்து மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளையும் உஷார் படுத்தி சுதந்திரமான மதவழிபாட்டுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

மதவழிபாட்டுக்கு இடையூறு செய்பவர்கள் மீது  கடும் நடவடிக்கைப் பாய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஆர்.எஸ்.எஸ்.தொடர்புடைய இந்து ஜாக்ரன் மஞ்ச் தனது சுற்றறிக்கையில் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டாம், அப்படிக் கொண்டாடினாலும் அது தங்களுடைய சொந்த ரிஸ்க்கில்தான் கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மாநிலத்தில் உள்ள தங்களது மாவட்ட கிளையில் உள்ளவர்களை பள்ளிகளுக்கு அனுப்பி இந்து மாணவர்களிடமிருந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக எந்த ஒரு பங்களிப்பையும் கோரக்கூடாது என்று அறிவுறுத்தவும் பணித்துள்ளது இந்து ஜாக்ரன் மஞ்ச்.

மேலும் தங்களது எச்சரிக்கையை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு முன்பாக ஆர்பாட்டம் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த அமைப்பு.

அலிகார் இந்து ஜாக்ரன் மஞ்ச் தலைவர் சோனி சவிதா தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கும் போது, “மிஷனரி மற்றும் பிற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்தப் பள்ளிகளில் கிறித்துவ மாணவர்கள் குறைவு. எனவே இவர்களின் வருவாய் இந்துக்களிடமிருந்து வருவதே. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதன் மூலம் கிறித்துவத்தை பரப்புகிறார்கள் என்று நாங்கள் பள்ளிகளுக்குச் சொல்வோம்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x