

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மும்பையில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. எத்தனை இடங்களில் போட்டியிடுவது, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் குறித்தும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில், மேலும் சில கட்சிகள் எங்கள் அணியில் இணைய உள்ளன. இவ்வாறு நிதிஷ் கூறினார்.