Published : 23 Dec 2017 05:09 PM
Last Updated : 23 Dec 2017 05:09 PM

எனது தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பிஹாரும் எனக்குத் துணை: தீர்ப்பு குறித்து லாலு கருத்து

எனது தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பிஹாரும் எனக்குத் துணையாக நிற்கிறது. எனக்கு நீங்கள் தொந்தரவு கொடுக்கலாம்; ஆனால் என்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது என்று பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2-வது வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவரைத் தவிர மேலும் 15 பேர் குற்றவாளி எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பை தொடர்ந்து லாலு பிரசாத் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘உண்மையைச் சுற்றி தற்போது பொய் சூழ்ந்துள்ளது. மிக வலிமையான பொய் மூலம் பிரச்சாரம் நடக்கிறது. பொய் பாதி தூரம் பயணப்பட்டுள்ளது. ஆனால், உண்மையை மூடி மறைத்து சூழ்ந்துள்ள பொய், விரைவில் நீக்கப்பட்டு உண்மை வெளிப்படும். இறுதியில் உண்மை வென்றே தீரும்.

நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியுற்றிருந்தால் அவர்களை வரலாறு வில்லன்களாகதான் சித்தரித்து இருக்கும். எனது தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பிஹாரும் எனக்குத் துணையாக நிற்கிறது. எனக்கு நீங்கள் தொந்தரவு கொடுக்கலாம்; ஆனால் என்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x