Last Updated : 20 Dec, 2017 02:50 PM

 

Published : 20 Dec 2017 02:50 PM
Last Updated : 20 Dec 2017 02:50 PM

பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு: ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, புதன்கிழமை அன்று ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரிவினைவாத தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக் மற்றும் முகமது யாசின் மாலிக் ஆகியோர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்போது பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதனையடுத்து அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான மிர்வைஸ்,''மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்.

இளம் பெண்கள் உள்ளிட்ட நமது காஷ்மீரிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவது தொடரும் நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு'' என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''கன்யார், ரைனாவாரி, நோவட்டா, எம்.ஆர்.கஞ்ச், சஃபா கடல் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

அங்குள்ள போக்குவரத்து வழிகளில் முட்கம்பி சுருள்கள் வைக்கப்பட்டுள்ளன. சிஆர்பிஎஃப் வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்'' என்றனர்.

இதனிடையே வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதிக்கும் ஜம்முவின் பன்னிஹால் பகுதிக்கும் இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x