Published : 19 Dec 2017 10:01 AM
Last Updated : 19 Dec 2017 10:01 AM

குஜராத், இமாச்சல் வெற்றி; கர்நாடகாவில் எதிரொலிக்கும்: பாஜக பொறுப்பாளர் நம்பிக்கை

கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இப்போது அவற்றிலும் ஒரு மாநிலத்தை (இமாச்சல்) இழந்துவிட்டது. குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக எதிரொலிக்கும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கர்நாடகா மட்டும்தான் முக்கியமானதாக உள்ளது. அதையும் காங்கிரஸிடம் இருந்து வெற்றி கொள்வோம்.

நாட்டில் கடினமான பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வந்த பிறகும் கூட, பிரதமர் மோடிக்கு உள்ள புகழ், செல்வாக்கால் குஜராத், இமாச்சலில் பாஜக.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நாட்டுக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. குஜராத் தேர்தலை நாடு முழுவதும் உள்ள மக்கள் உன்னிப்பாக கவனித்தனர். இது 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x