Published : 19 Dec 2017 09:07 AM
Last Updated : 19 Dec 2017 09:07 AM

குஜராத்தில் நோட்டாவுக்கு ஐந்தரை லட்சம் வாக்குகள்

குஜராத்தில் ‘நோட்டா’வுக்கு ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலில் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் அதை தெரிவிப்பதற்காக வாக்குப் பதிவு இயந்திரத்தில் நோட்டா (None Of The Above) என்ற பொத்தானும் பொருத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் நேற்று இரவு இறுதி நிலவரப்படி நோட்டாவுக்கு 5,51,615 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.8 சதவீதம் ஆகும். மேலும் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் வாக்கு சதவீதத்தை விட இது அதிகமாகும்.

சோம்நாத், நரன்புரா, காந்திதாம் போன்ற தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் சிலவற்றை விட நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் அதிகம். போர்பந்தர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுபாய் பொக்ரியா 1,855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இங்கு நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 3,433 ஆகும்.

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து சுயேச்சைகள் 4.3 சதவீத வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளனர். இதையடுத்து 4-வது இடத்தில் நோட்டா உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x