Published : 14 Jul 2014 11:45 AM
Last Updated : 14 Jul 2014 11:45 AM

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்க கூடாது:வெங்கய்ய நாயுடு பேட்டி

மக்களவை துணை சபாநாயகர் பதவி தருகிறோம் என அதிமுகவிடம் நாங்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

இதுகுறித்து அவர் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, “இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக் கிழமை வரை அவர்கள் சபாநாயகரை சந்தித்து பேசாமல் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை தான் அவர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

பாஜக மீது பழிபோடும் விளையாட்டு அவர்களுக்கு உதவாது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பதவி இல்லை.

இந்த விவகாரத்தில் சபாநாயகர் விரைவில் முடிவு எடுப்பார். அதற்கு முன், முந்தைய நடை முறைகள், மரபுகள், விதிகள் என பலவற்றை அவர் ஆராய வேண்டியுள்ளது” என்றார்.

அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி?

அதிமுகவுக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி வழங்கப் படுமா என்ற கேள்விக்கு வெங் கய்ய நாயுடு கூறும்போது, “இப்பதவி தருகிறோம் என அதிமுக விடம் நாங்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. துணை சபாநாயகர் பதவியை எதிர்க் கட்சிக்கு வழங்குவது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இந்தப் பதவியை எந்தக் கட்சிக்குத் தருவது? ஏனென்றால் எதிர்க்கட்சி வரிசையிலும் பல கட்சிகள் உள்ளனவே” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “முந்தைய அரசின் தொடர்ச்சியே இந்த பட்ஜெட் என்று காங்கிரஸ் கூறுவது பற்றி கேட்கிறீர்கள். வளர்ச்சிக்கு தொடர்ச்சி அவசியம். ஆட்சி வருவது என்றால், முந்தைய அரசு செய்ததை எல்லாம் புதிய அரசு நிராகரிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x