காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் அமர்வு அறிவிப்பு

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் அமர்வு அறிவிப்பு
Updated on
1 min read

பெங்களூரு / புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றாத கர்நாடகாவுக்கு எதிராகதமிழக அரசு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று முன்தினம் வலியுறுத்தியது. இந்நிலையில், தமிழக அரசின் மனுவுக்கு கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க3 நீதிபதிகள் புதிய‌ அமர்வு அமைக்கப்படும்'' என தெரிவித்தார். இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நேற்று மாலை 3 நீதிபதிகள் அடங்கிய‌ புதிய அமர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர்அடங்கிய அமர்வு காவிரி வழக்கை விசாரிக்கும்.

இந்த அமர்வு வரும் 25-ம்தேதி இவ்வழக்கைவிசாரிக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியாவில் விவசாய அமைப்பினர் நேற்றுபோராட்டம் நடத்தினர். மண்டியாவில் உள்ள ஜெயசாமராஜா சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டகர்நாடக மாநில விவசாய சங்கத்தினர் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டியை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் பெங்களூரு - மைசூரு இடையேசுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விவசாய அமைப்பினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, கைது செய்தனர்.

இந்நிலையில் கர்நாடக அரசுகாவிரி விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக புதன்கிழமை மாலை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பாஜக, மஜத, கர்நாடகாவை சேர்ந்த எம்பிக்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in