சிம்லாவில் கனமழையால் நிலச்சரிவு: சிவன் கோயில் இடிபாடுகளில் 17 பேரின் உடல்கள் மீட்பு

சிம்லாவில் கனமழையால் நிலச்சரிவு: சிவன் கோயில் இடிபாடுகளில் 17 பேரின் உடல்கள் மீட்பு
Updated on
1 min read

சிம்லா: இமாச்சல பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலச்சரிவு காரணமாக சம்மர்ஹில் பகுதியில் அமைந்திருந்த சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கிருந்து 17 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து இமாச்சல பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர் பிரபோகத் சக்சேனாநேற்று கூறும்போது, ‘‘இதுவரை 17 பேரின் உடல்களை மீட்டுள்ளோம். இன்னும் 2 பேரின் உடல்கள் உள்ளேயே சிக்கியுள்ளன. அதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும் சிலரின் உடல்கள் உள்ளேயே சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அந்த உடல்களையும் மீட்டுவிடுவோம்.

இப்பகுதியில் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தை சீர் செய்து வருகிறோம். சாலைகள் செப்ப னிடப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in