Published : 08 Dec 2017 09:51 am

Updated : 08 Dec 2017 09:51 am

 

Published : 08 Dec 2017 09:51 AM
Last Updated : 08 Dec 2017 09:51 AM

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கட்சியிலிருந்துமணிசங்கர் அய்யர் சஸ்பெண்ட்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் அறிவுரைப்படி மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் அவர் கட்சியிலிருந்து நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடியை “நீச் ஆத்மி” என்று விமர்சித்தார். இதுகுறித்து குஜராத்தில் நேற்று பிரச்சாரம் செய்த மோடி, “நான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவன்தான். ஏழைகள், தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எனது வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன், என்னை அவதூறாக விமர்சித்த காங்கிரஸுக்கு குஜராத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “மணிசங்கர் அய்யரின் கருத்தை நான் ஏற்கவில்லை. அவர் மன்னிப்பு கோர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மணி சங்கர் அய்யர் அளித்த விளக்கத்தில், “இந்தி எனது தாய்மொழி அல்ல. ‘தரம் தாழ்ந்து’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த வார்த்தை பிரதமரை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என்றார

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நேற்றிரவு அறிவிக்ககப்பட்டது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author