ஆசியாவில் மிகப்பெரியது ஸ்ரீநகர் துலிப் தோட்டம்: உலக சாதனை புத்தகம் அங்கீகாரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜபர்வான் மலையடிவாரத்தில் இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் முயற்சியால் கடந்த 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

74 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் தோட்டம் ஆகும். 68 வகையான மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இதில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த தோட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியது என உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் நடைபெற்ற விழாவில் இதற்கான சான்றிதழை காஷ்மீர் நிர்வாக செயலாளர் (மலர், தோட்டம், பூங்கா) பயாஸ் ஷேக்கிடம் உலக சாதனை புத்தக நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ சந்தோஷ் ஷுக்லா வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உலக சாதனை புத்தக ஆசிரியர் திலிப் என் பண்டிட், காஷ்மீர் மலர் வளர்ப்புத் துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள், தோட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். சான்றிதழை பெற்றுக் கொண்ட பயாஸ் ஷேக் பேசும்போது, “துலிப் மலர் தோட்டத்தின் மகத்துவத்தை அங்கீகரித்த உலக சாதனை புத்தக குழுவுக்கு நன்றி” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in