வதந்தியை நம்ப வேண்டாம்: வனத்துறை வேண்டுகோள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் நேற்று கூறியதாவது:

சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்குகள் உள்ளன. இவை அதிகமாக இரவு நேரங்களில் வேட்டையாட வெளியே வருகின்றன. இந்த நேரத்தில் தான் சிறுவர்களை சிறுத்தை தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 320 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆதலால் பக்தர்கள் வீண் வதந்தியை நம்ப வேண்டாம். ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இவ்வாறு ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in