மும்பையில் கனமழையால் 1,100 மரங்கள் சாய்ந்தன

மும்பையில் கனமழையால் 1,100 மரங்கள் சாய்ந்தன
Updated on
1 min read

மும்பை: மும்​பை​யில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்​களில் 1,100-க்​கும் மேற்​பட்ட மரங்​கள் வேரோடு சாய்ந்​துள்​ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல வாக​னங்​கள் சேதமடைந்​துள்​ளன. குறிப்​பாக, ஜூலை 6-ம் தேதி ஒரே நாளில் 523 மரங்​கள் விழுந்​துள்​ளன. கோரே​கான், குர்லா, மாதுங்கா மற்​றும் தாதர் ஆகிய பகு​தி​கள் இதனால் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்​திருந்​த​தால் மும்​பை​யில் நேற்று பள்​ளி, கல்​லூரி​களுக்கு விடு​முறை அளிக்​கப்​பட்​டது. மேலும் கனமழை காரண​மாக மும்​பை​யில் நேற்று விமான சேவை பாதிக்​கப்​பட்​டது.

ஜூன் 30-ம் தேதி செம்​பூரில் பள்​ளிப் பேருந்து மீது மரம் விழுந்ததில் விஹான் ஸ்ரீவஸ்​தவ் (11) என்ற மாணவன் உயிரிழந்தான். இச்சம்​பவத்​தில் மேலும் 4 குழந்​தைகள் காயமடைந்​தனர்.

ஜூலை 5-ம் தேதி ஆரே காலனி​யில் மோட்​டார் சைக்​கிளில் சென்​ற​போது மரக்​கிளை விழுந்​த​தில் ஹசன் ரசா (18) உயி​ரிழந்​தார். ஜூலை 6-ம் தேதி குர்லா மேற்​கில் கடை ஒன்​றின் மீது மரம் விழுந்​த​தில் யுனுஸ் குண்டா வாலா (63) உயி​ரிழந்​தார். இவரது குடும்​பத்​துக்கு பிஎம்சி ரூ.5 லட்​சம் நிவாரணம் அறிவித்துள்​ளது.

மேற்​குப் புறநகர்ப் பகு​தி​களில் அதி​கபட்​ச​மாக 448 மரங்​களும், கிழக்​குப் புறநகர்ப் பகு​தி​களில் 340 மரங்​களும், நகரப் பகு​தி​யில் 336 மரங்​களும் விழுந்​துள்​ளன. திட்​ட​மிடப்​ப​டாத கட்​டு​மானங்​கள், மரங்​களின் வேர்​களைச் சுற்றி கான்​கிரீட் போடு​வது மற்​றும் முறை​யான பராமரிப்​பின்மை ஆகிய​வையே மரங்​கள் பலவீனமடையக் காரணம் என நிபுணர்​கள் குற்​றம் சாட்டுகின்றனர்.

இந்த வாரம் மேலும் மழை பெய்​யக்​கூடும் என்​ப​தால், வாகனங்களை மரங்​களின் அடி​யில் நிறுத்த வேண்​டாம் என்​றும், சாய்ந்த மரங்​கள் குறித்து உடனடி​யாக மாநக​ராட்​சிக்​குத் தெரிவிக்​கு​மாறும் அதி​காரி​கள் பொது​மக்​களைக் கேட்​டுக் கொண்​டுள்​ளனர். டெல்​லி​யிலும் நேற்று கனமழை பெய்​தது. இதனால் அங்​கும் விமான சேவை​கள்​ பா​திக்​கப்​பட்​டன. போக்​கு​வரத்​தும்​ ஸ்தம்பித்தது.

மும்பையில் கனமழையால் 1,100 மரங்கள் சாய்ந்தன
அமைச்சரின் பெயரிலான பரிந்துரை கடிதம்: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தொடரும் சர்ச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in