Published : 11 Dec 2017 06:42 PM
Last Updated : 11 Dec 2017 06:42 PM

தெலுங்கு நடிகர் விஜய் சாய் மரணம் : தற்கொலையா? என விசாரணை

தெலுங்கு நடிகர் விஜய் சாய் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

பொம்மரில்லு உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சாய் (35) திருமணமாகி ஹைதராபாத்தில் வசித்து வந்தநிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தனியாக வசித்து வந்தார். அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவி புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக இன்று (திங்கள்) மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கூடும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x