Last Updated : 03 Nov, 2017 07:29 PM

 

Published : 03 Nov 2017 07:29 PM
Last Updated : 03 Nov 2017 07:29 PM

போபால் பாலியல் பலாத்கார வழக்கு: 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 19 வயது இளம் பெண் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயர் போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரின் 19 வயது மகள், மூன்று நாட்களுக்கு முன் போபால் புறநகர் பகுதியில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் அருகே ஒரு கும்பலால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதுகுறித்த புகாரை போலீஸார் ஏற்கவில்லை. மூன்று காவல் நிலையங்களுக்கு அலைந்தபோதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து போபால் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் 4 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யபட்டனர். அவர்களில் 3 பேர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் ஆவார். மேலும் சம்பவம் நடந்த பகுதியின் போலீஸ் எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x