

லே: பெப்பர்ஃப்ரை நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அம்பரீஷ் மூர்த்தி (51) மாரடைப்பால் லடாக்கில் உள்ள லே நகரில் திங்கள்கிழமை இரவு காலமானார்.
பெப்பர்ஃப்ரை நிறுவனம் ஃபர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது. அம்பரீஷ் மற்றும் ஆஷிஷ் ஷா இணைந்து 2011-ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கினர்.
அம்பரீஷ் ஐஐஎம் கல்கத்தாவில் மேற்படிப்பு முடித்தவர். இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு காட்பரி, ஐசிஐசிஐ புருடென்சியல், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினார்.