குஜராத் முதல் மேகாலயா வரை | இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது கட்டத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி | கோப்புப் படம்
ராகுல் காந்தி | கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது யாத்திரையை குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை நடத்த இருப்பதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது பாகத்தை மேற்கொள்ளவிருக்கிறார். குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை இந்த யாத்திரையை அவர் நடத்தவுள்ளார்.

ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்ளும் போது மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தத்தம் பகுதிகளில் யாத்திரைகளை ஒருங்கிணைத்து நடத்தவுள்ளனர்" என்றார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதல் பகுதி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவு பெற்றது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 3,970 கிலோ மீட்டர் நடந்தார். 130 நாட்கள் இந்தப் பயணம் நீடித்தது.

இந்நிலையில் இரண்டாவது இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார். ஆனால் அவர் அது எப்போது நடைபெறும் என்பது பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in