Published : 27 Nov 2017 03:34 PM
Last Updated : 27 Nov 2017 03:34 PM

குஜராத் தேர்தல்: வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிடுகிறார் ஜிக்னேஷ்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்காம் தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாக தலித் போராளியும் பட்டியல் இனத்தவரின் பிரதிநிதியுமான ஜின்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தோழர்களே, குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம்- 11 தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறேன். நாம் போராடுவோம், வெற்றி பெறுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானியின் முடிவுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் அத்தொகுதியில் யாரும் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் எம்எல்ஏ மணிபாய் வகேலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கூறிய அவர், ''பழங்குடியினத் தொகுதியான வட்காமில் ஜிக்னேஷ் போட்டியிடுகிறார். இந்த முறை அத்தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி தெரிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் மேவானி தனித்துப் போட்டியிட்டாலும் அவரைக் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

வட்காம் தொகுதியில் பாஜக சார்பில், விஜய் சக்ரவர்த்தி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x