Published : 05 Jul 2014 06:15 PM
Last Updated : 05 Jul 2014 06:15 PM

டெல்லியில் திறந்தவெளி சிறைச்சாலை: மீண்டும் பரிசீலனையில்

தலைநகர் டெல்லியில் திறந்தவெளி சிறை ஒன்றை உருவாக்கும் திட்டம் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

புதுடெல்லியில் உள்ள துவாரகாவின் பப்ரோலா என்ற இடத்தில் இந்தச் சிறை உருவாக்கப்படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைக்கம்பிகள் அற்ற இந்தச் சிறைச்சாலையை உருவாக்க நீண்ட நாட்களாகவே திட்டம் தீட்டப்பட்டு வந்தது. இந்தத் திறந்தவெளி சிறைச்சாலையை உருவாக்குவதற்கான முக்கியக் காரணம் என்னவெனில், கைதிகளின் சிந்தனைப் போக்கை மாற்றி தன்னம்பிக்கையுடன் அவர்கள் உழைக்க வழிவகை செய்வதும், அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தவும், சிறையிலிருந்து அவர்கள் விடுதலையானவுடன் சமூகத்தில் வழக்கம் போல் செயல்பட வைப்பதும் ஆகும் என்று டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு இந்தத் திறந்தவெளி சிறைச்சாலை திட்டம் முதன் முதலாக உதித்தது. ஆனால் அப்போது தாதாக்களின் அச்சுறுத்தலினால் இதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகத் தெரிகிறது.

நன்னடத்தைச் சான்றிதழ் பெற்ற கைதிகளுக்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் செயலாற்றும் கைதிகளுக்குமானது. மேலும் கடின உழைப்பிற்குத் தயாராக இருக்கும் கைதிகளுக்கும் இந்த திறந்தவெளிச் சிறைச்சாலை உதவிகரமாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திஹார் சிறைச்சாலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 6000 கைதிகளை மட்டுமே வைத்திருக்க முடியக்கூடிய திஹாரில் தற்போது 10,000 கைதிகள் இருக்கின்றனர்.

திஹார் சிறைச் சாலையில் 9 சிறைகள் உள்ளன.ரோகிணி சிறைச்சாலையில் 3 சிறைகளே உள்ளன.வரவிருக்கும் இன்னொரு சிறைச்சாலை வளாகத்தில் 6 சிறைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது, திறந்தவெளிச் சிறைச்சாலைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு சிறைச்சாலைகளுக்கும் டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ளது, குற்றங்கள் பெருகும் ‘தலை’நகரமாயிற்றே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x