Last Updated : 27 Nov, 2017 08:10 PM

 

Published : 27 Nov 2017 08:10 PM
Last Updated : 27 Nov 2017 08:10 PM

கேரளப் பெண் ஹாதியா சேலத்தில் தன் ஹோமியோபதி படிப்பைத் தொடரலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

லவ் ஜிஹாத் விவகாரத்தில் கேரளப் பெண் ஹாதியாவிடம் பேசிய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் சேலத்துக்குச் சென்று அவர் தன் படிப்பைத் தொடர அனுமதித்துள்ளது. அதாவது பெற்றோரின் பிடியிலிருந்து ஹாதியாவை விடுவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

எனவே ஹாதியா, சேலத்தில் தனது ஹோமியோபதி படிப்படித் தொடரவிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திங்களன்று ஹாதியாவை பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்துக்கு விரைவில் அனுப்பிட ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.

சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை ஹாதியாவின் பாதுகாப்பாளராக நியமித்தது உச்ச நீதிமன்றம் மேலும் எதுவும் சிக்கல் தொடர்ந்தால் தங்களை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹாதியாவை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொண்டு அவர் தங்குவதற்கு விடுதி வசதிகளை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 2 மணி நேர விசாரணையின் போது ஹாதியா, தான் தன் கணவன் ஷபின் ஜஹானுடன் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

முதலில் மதம் மாறிய ஹாதியா, பிறகு முஸ்லிம் நபரைத் திருமணம் செய்து கொண்டார். இது லவ் ஜிஹாத் என்று கூறி கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா-ஜஹான் திருமணத்தை செல்லாது என்று அறிவித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தை ஹாதியா நாடினார்.

இந்நிலையில் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவைத் தடைச் செய்யக் கோரி ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இடைக்கால ஏற்பாடாக ஹாதியா தனது ஹோமியோபதி படிப்பை தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x